விநாயகா, புவி நாயகா சரணம்.
ஞானத்தின் செழுஞ் சுடரே!
த்யானத்தின் ஆழ்நிலையே!
மோனத்தின் முழுப் பொருளே!
தேகத்தில் மூலாதாரமே!
மோகத்தின் முடிவிடமே!
ஏகத்தின் உணர்விடமே!
பஞ்ச பூதங்களின் உறைவிடமே!
பஞ்ச வினைகள் புரிபவனே!
பஞ்சக்கரனே, ப்ரபஞ்ச இயக்கமே!
கணங்களின் நாயகன் நீ!
முக்கண்ணன் முதல் மகன் நீ
முக்கண்ணும் கொண்ட
முதல்வனே நீ தானே! ப்ரணவத்தின் வடிவமே!
ப்ரணவத்தின் நாதமே!
ப்ரணவத்தின் அர்த்தமே!
வினைகளின் தடையே, தடை நீக்கமே!
கலைகளெனும் விளக்கே
அவற்றின் விளக்கமே!
தத்துவ வித்தே, விரிவே, விளைவே!
எளியோருக்கு எளிமையே!
வலிமைக்கெல்லாம் வலிமையே!
தனிமையில் உறுதுணையே
இனிமையில் பூரணமே!
கனிந்தருள் புரிவாய்
கணபதி சரணம்
ஜானகி ரமணன் புனே
No comments:
Post a Comment