Sunday, 13 June 2021

2021- Krithigai- Peacock carrying Lord Subramanya's sacred texts.....

 


The Tamil writings in the peacock's feathers are the names of the Sacred Texts on Lord Subramanya....

Most of them are in Tamil except for a couple, which are in sanskrit....

Tamil texts:

-------------------

Kandha Puraanam

Thiruppugazh

Thiruvaguppu

Vel Mayil Viruttam

Kandhar Anthadhi

Kandhar Alankaram

Kandhar Anubhoothi

Thirumurugatruppadai

Panchamrita Vannam

Sashti Kavacham

Shanmuga Kavacham

KandhaGuru Kavacham

Sanskrit Texts:

------------------------

Kumaara Sambhavam

Subramanya Bhujangam

                                                                                 















                                                                                                                                                                           


                                                                                     

Monday, 7 June 2021

2021- Vaikasi Visagam- Peacock...

 

வைகாசி விசாகத்தின்  சதகோடிச் சூர்ய. ப்ரகாசமே!

முருகா!

ஆறு தாரகைகளின் கூட்டமாம் விசாகம் ஆறுமுகத்தின் அம்சம் தானோ!

பரமனின் நெற்றிக் கண் வரமாகத் தந்தது ஆறு அக்னிப் பொறிகள் அல்லவா!

சரவணத்தின் தவழ்ந்தது ஆறு ஆனந்த அலைகள் அல்லவா!

அது ஷடாட்சர தத்துவத்தின்

சாரம் அல்லவா!

குருவின் நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து பரமகுரு ஞானத்தின் பூரணமாய் வந்துதித்தானோ!

பக்தர் விழிநீர் பெருக்கவும், மொழி தடுமாறவும், ஜாஜ்வல்லியமாக வந்த ஆறு வதனங்களே!

ஈராறு விழிகளில்  பொங்கும் எழிலே! அருளே

மின்னோட்டமே!

தேவாதி தேவன் என உணர்த்த எடுத்த கோலம் ஒரு முன்னோட்டமே!

காரண காரியம் கடந்த பூரணனே

ஆறுமுகத்துள் உன் ஆற்றலை தேக்கிக் கொண்டு  அவதாரம் செய்ததன் காரணம் என்னய்யா, முருகையா!

தீய சக்திகள் உன் பன்னிரு

தோள் திறனில் த்வம்சம் என உணர்த்தவோ!

கலியுக வரதன் நீ என்று காட்டத்தானோ!

வள்ளி தத்துவம் என்னவென்று தெளிய வைக்கத் தானோ!

மாயத் திரை கிழிக்கத்தானோ!

துயர வெள்ளத்தை தடுக்க ஆறு அற்புத அணைகளோ!

ஆறுமுகா என்று அழைக்கு முன்னே வந்து விடும் ஆறுதலாம் துணையோ!

அறுபடை வீடுகள் முக்தி வாசலின் ஆறு கதவங்கள் தானோ!

விசாகனே!

சத்திய நித்தியனே

சரணம் சரணம் சரவணபவனே


                                                                                  

                                                                                                                                                                     

                                                                                                       


                                                                  

                                                                                  


                                                                                 

                                                                                            

                                                                                                                                                                      




                            


                                                                                     



 


Sunday, 9 May 2021

2021- Mother's Day....Sharing an old rangoli.....

 தாய்மை என்னும் தூய அன்பு கங்கை.........

கடவுள் தன் கருணையை அனைவரும் ப்ரத்யட்சமாக அனுபவிக்க அனுப்பி வைத்த புனிதம்..........
த்யாகம் என்பது அவள் வாழ்க்கை முறை.........
வழிகாட்டல் என்பது இயல்பான நடைமுறை.........
பக்தியென்னும் இசைக்கு குருவாய் அமைந்து, திருத்தித் திருத்தி மெருகேற்றும் மேன்மை,.......
இதயம் என்பது பூவாய் மலர்ந்து விடும் மென்மை.......
விழி தந்து வண்ண உலகைப் பார்க்க வைத்து, மொழி தந்து, எங்கும் பாலம் அமைத்து, வழி தந்து நடக்க வைக்கும் இன்பம்.........
நம் குறைகளே தெரியாத, தெரிந்தாலும் மன்னித்து விடுகின்ற நிறை குடம்........
தள்ளாடும் தளர்நடை ரசித்தவள்...........
முள்ளாடும் பாதைகளில் எச்சரிக்கையானவள்.நம் உள்ளாடும் நற்பண்புகளுக்கெல்லாம்ஊற்றுக் கண் ஆனவள்.........
உறவின் இழைகளை பலப்படுத்தி உற்ற துணை ஆக்கியவள்..........
இன்றைய நம் வாழ்வுக்கு, அன்றே வடிவம் தந்து வண்ணம் ஏற்றியவள்.எண்ணமெல்லாம் நீ தான் அம்மா........
ஏற்றமெல்லாம் உன்னால் அம்மா.......
பொங்கி வழியும் உள்ளத்திற்கு வடிகால் அமைத்து உன்னைப் போற்றத் தாய் மொழியிலும் போதிய சொற்கள் இல்லையே தாயே......
தாள் பணிகின்றோம்.......
ஜானகி ரமணன் புனே




Wednesday, 21 April 2021

2021- Shri Rama Navami.....

 ஜன்ம ரட்சக மந்திரமே, ஜனனம் ஆன ராம நவமி. தர்மத்தின் முழுமையான வடிவம் , ரம்மியமான நாமம் தாங்கி வந்துதித்த| புனித தினம். பாற்கடலே பொங்கி வந்து பாரினை மேம்படுத்திய தினம். ராமா, ராமா என்று உருகி மனித குலம் கடைத்தேற , தினகரக் கொழுந்தாய் வந்தான். அன்பென்றால் உலகளாவ விரிந்திருக்க வேண்டும். பரிவென்றால் கடலாய் பரந்திருக்க வேண்டும். அது அகத்தில் ஊற்றெடுத்துப் பார்வையாய் மலர வேண்டும். பண்பென்றால் சிகரம் தொடவேண்டும். கடமை என்பது யாகக் கனல் போல் கையாளப்பட வேண்டும். தாயே கோயில், தந்தை சொல்லே மந்திரம் என்பது வாழ்க்கையின் அடித்தளமாக ஆக வேண்டும். உறவை ,நட்பை , ஒவ்வொரு இழையாய்ப் பார்த்துப் பார்த்து பின்ன வேண்டும் -- எனக் காட்டிக் கொடுத்தவன். சத்தியம், தர்மம் இரண்டு விழிகளாய்க் கொள்ளச் சொன்னான். சின்னச் சின்ன விஷயங்களில், பெரிய பெரிய, எண்ணங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்றான். அவன் காடுமேடுகளில் நடந்ததெல்லாம், நம்மைச் சம்சாரக் காட்டிலிருந்து விடுவிக்கத் தான். ஒரே பாணத்தில் ஆயிரமாயிரம் அசுர குணங்களை அழிக்கத் தான். மனித இனம், விலங்கினம் என்ற தளைகள் அகற்றி, உயிரினம் என்று கொண்டாடும் உன்ன்தம் உணரத்தான். ஆட்சி என்பது எப்படி அமைய வேண்டும் என வேந்தருக்குக் காட்டத்தான். முடியாட்சி என்ற பெயரில் அது குடியாட்சி தான் என மக்களை முன்னிலைப் படுத்தும் மாண்புதான். மனவளம், நிலவளம் செழிக்க வைத்தான். இன்பமும், அமைதியும் தழைக்க வைத்தான். புருஷோத்தமனே, உத்தம புருஷனாய் உதித்த அவதாரம். அவன் போட்டு வைத்த லஷ்மண ரேகைகள் அனந்தம். அவற்றை மீறாமல் கட்டுக்குள் வாழ்ந்தால் ஆனந்தம். தீனதயாளா, தினகரச் சுடரே, ராமா, சரணம் சரணம்- Mrs. Janaki Ramanan, Pune                                               


                                   













                                                    Gayatri's singing some 8,9 years ago....

                                                                                  


Wednesday, 14 April 2021

2021- Tamil New Year...

 

பச்சை மயில் வாகனனே சிவ

பால சுப்ரமண்யனே வா இங்கு

இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் அதில்
எள்ளளவும் ஐயமில்லையே
I have surrendered unto the Lord who rides the green peacock.... And.... I don't have any fear whatsoever...
சித்திரைப் பெண்ணாள் பரிவுடன் சிரித்து வருகின்றாள்
முத்திரை பசும்பொன்னாய்
ஒளிமழை சிந்தி வருகின்றாள்.
பொங்கும் இன்பக் கடலாய் ஆடி வருகின்றாள்.
மங்கல முத்துச்சுடர்கள் ஏந்தி வருகின்றாள்.
இருளைக் கலக்கி விரட்டும் கதிராய் வருகின்றாள்.
மருள் தரும் நோயெனும் தீயை மாய்க்க வருகின்றாள்
இவள் கருணைக்கு முன் சிறுமைகள் நிற்பதில்லை.
ராம பாணத்தின் முன் அற்ப ஜந்துக்கள் நிலைப்பதில்லை. பக்தியை எதிர்த்து எதுவுமே என்றுமே வென்றதில்லை .
சக்திகள் தோற்றதாய்
சரித்திரமே இல்லை.
மற்றவருக்காய் மனம் உருகி வேண்டுவது வீண்போவதில்லை.
சுயநலங்கள் சுருண்டு போகட்டும்.
மாசுகள் தூசாய் அடித்துச் செல்லப்படட்டும்.
புத்துணர்வுப் பூக்கள் பாரெலாம் மலரட்டும்.
புதிதான உதயம் விடிவெள்ளியாய் புலரட்டும்.
கைகோர்த்து புவனம் அதை வரவேற்கட்டும்.
தமிழ் போலும் வளமான, இன்பமயமான ஆண்டு துவங்கட்டும்.
ஆண்டவன் அருள் அனைவரையும் காக்கட்டும்.
Mrs. Janaki Ramanan- Pune