Friday, 24 July 2020

2020- AaDi Pooram- Diya




            "AaDi" is the Tamil month and "Pooram" is the star... This day is very auspicious for the Goddess -               equivalent to Navratri.. ..it is considered to be Her birthday.. It is Goddess AaNDaaL's birthday                   too,,,....this marks the beginning of all of our festivals....
             ஆண்டாள் திருவடி சரணம்.
            விஷ்ணுவையே சித்தத்தில் நிறைத்து , வாழ்ந்திருந்த விஷ்ணு சித்தராம்                                பெரியாழ்வாருக்கு , ஒரு பரிசுத்த மலரைப் பரிசாகத் தர விழைந்தான்                  பரந்தாமன். அதற்கு ஆடிப் பூரம் என்ற திருநாளைத் தேர்ந்தெடுத்தான்.
            அன்றுதான் பூதேவியின் அம்சமான ஆண்டாள் நம் தவப்பயனாய்ப் பூவுலகைத்      தேடி வந்தாள்.
            திருவில்லிப்புத்துரைத் தேர்ந்தெடுத்தாள்..புனிதத் துளசிச் செடி அருகே      குழந்தையாய்த் தவழ்ந்தாள். பெரியாழ்வாரை ஆனந்தக் கடலில் ஆழ்த்தி விட்டாள்
           அவருடைய கண்ணுக்குக் கண்ணாய், உயிரின் உயிராய் , வளர்ந்தாள்.
            திருப்பாவை என்னும் தமிழமுதம் தந்தாள். அதில் வேத, வேதாந்தத்தின் சாரம்      பிழிந்து தந்தாள்.
            கண்ணனின் அற்புத தரிசனம் காட்டி, நம்முளே பக்தி வெள்ளம் பாய்ந்திடச்,    செய்தாள்.
            மலர்ப் பாதை ஒன்றமைத்து மாதவனின் பாத மலருக்கு
            நம்மை அழைத்துச் செல்லும் கோதையின்
            திருவடி சரணம்.
Mrs.Janaki Ramanan- Pune








           
                                                                                   

Sunday, 5 July 2020

2020- Guru Poornimaa






                                 Thanks to Mrs. Raji Krishnan for the background song.....                                                  

Saturday, 4 July 2020

2020- Arunagirinaathar Guru Poojai...

Saint Arunagirinaathar was ardent devotee of Lord Subramanya and composed many hymns (in Tamil )on Him and the collection is called "Thiruppugazh "
This falls on the 'Mooam' star in the tamil month of "Aani"....which is 4th of July 2020..

                                                                               







                                                                                                                                                               







Thanks to Mrs.Raji Krishnan for the background song..


Thursday, 4 June 2020

2020- Vaigaasi Vishaagam- The birth of Lord Subramanya...

He was born in the Tamil month of "Vaigaasi' and in the star 'Vishaagam"... It is an important festival for all Muruga /Subramanya devotees...
வைகாசி விசாகத்தின் சதகோடிச் சூர்ய. ப்ரகாசமே!
முருகா!
ஆறு தாரகைகளின் கூட்டமாம் விசாகம் ஆறுமுகத்தின் அம்சம் தானோ!
பரமனின் நெற்றிக் கண் வரமாகத் தந்தது ஆறு அக்னிப் பொறிகள் அல்லவா!
சரவணத்தின் தவழ்ந்தது ஆறு ஆனந்த அலைகள் அல்லவா!
அது ஷடாட்சர தத்துவத்தின்
சாரம் அல்லவா!
குருவின் நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து பரமகுரு ஞானத்தின் பூரணமாய் வந்துதித்தானோ!
பக்தர் விழிநீர் பெருக்கவும், மொழி தடுமாறவும், ஜாஜ்வல்லியமாக வந்த ஆறு வதனங்களே!
ஈராறு விழிகளில் பொங்கும் எழிலே! அருளே
மின்னோட்டமே!
தேவாதி தேவன் என உணர்த்த எடுத்த கோலம் ஒரு முன்னோட்டமே!
காரண காரியம் கடந்த பூரணனே
ஆறுமுகத்துள் உன் ஆற்றலை தேக்கிக் கொண்டு அவதாரம் செய்ததன் காரணம் என்னய்யா, முருகையா!
தீய சக்திகள் உன் பன்னிரு
தோள் திறனில் த்வம்சம் என உணர்த்தவோ!
கலியுக வரதன் நீ என்று காட்டத்தானோ!
வள்ளி தத்துவம் என்னவென்று தெளிய வைக்கத் தானோ!
மாயத் திரை கிழிக்கத்தானோ!
துயர வெள்ளத்தை தடுக்க ஆறு அற்புத அணைகளோ!
ஆறுமுகா என்று அழைக்கு முன்னே வந்து விடும் ஆறுதலாம் துணையோ!
அறுபடை வீடுகள் முக்தி வாசலின் ஆறு கதவங்கள் தானோ!
விசாகனே!
சத்திய நித்தியனே
சரணம் சரணம் சரவணபவனே
Mrs. Janaki Ramanan... Pune
    
                                                                               


















                            
                                       Thanks to Mrs. Raji Krishnan for the background song....